மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் மூன்று ராசியினர் - அதிலும் விருச்சிக ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் மூன்று ராசியினர் - அதிலும் விருச்சிக ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: இன்று வரவு அதிகரிக்கும் என்றாலும் அரசாங்க விஷயத்தில் கவனம் அவசியம். பரணி: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். லாபமான நாள். கார்த்திகை 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்ட வேலைகள் எளிதாக நடந்தேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ரோகிணி: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். விஐபிகள் உங்களுக்கு ஆதரவு புரிவார்கள். மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். திருவாதிரை: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வருமானம் கூடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புனர்பூசம் 1,2,3: பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. செலவிற்கேற்ற வரவு உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: எந்த ஒன்றிலும் அவசரம் வேண்டாம். அமைதியாக செயல்படுங்கள். பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆயில்யம்: முயற்சியில் தடைகள் அதிகரிக்கும். தடுமாற்றம் ஏற்படும். கவனமுடன் செயல்படவும்.

சிம்மம்

மகம்: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பயணத்தில் கவனம் தேவை. பூரம்: குடும்பத்தினரால் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நன்மையாகும். உத்திரம் 1: வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடப்படுவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். புதிய முயற்சி லாபமாகும். நன்மையான நாள். அஸ்தம்: லாப ஸ்தான சந்திரனால் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். கடன்களை அடைப்பீர்கள். சித்திரை 1,2: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக புதிய முயற்சி செய்வீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சுவாதி: தொழிலில் இருந்த தடைகள் விலகும் என்றாலும், மற்றவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். வழக்கமான செயல்கள் லாபமாகும். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். அனுஷம்: மனக்குழப்பம் விலகும். விஐபிகள் ஆதரவால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். கேட்டை: பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். எண்ணம் எளிதாக பூர்த்தியாகும்.

தனுசு

மூலம்: அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். செயல்களில் கூடுதல் கவனம் தேவை. பூராடம்: எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். விரோதிகளால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். உத்திராடம் 1: கடுமையாக உழைத்து நினைத்ததை சாதிப்பீர்கள். நெருக்கடிகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் கூடும். திருவோணம்: நண்பர்கள் வழியே நன்மைகள் அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியம் கூடும். துணிச்சலுடன் செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். சதயம்: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: எதிர்பாராத வரவு உண்டு. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

மீனம்

பூரட்டாதி 4: குழந்தைகளின் நன்மைக்காக எதிர்கால திட்டம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்திரட்டாதி: உங்கள் நலனில் அக்கறை கொள்வீர்கள். பெற்றோருடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். ரேவதி: சொத்து விஷயத்தில் இருந்த பிரச்னை சுமூகமாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.