பகைவரால் உண்டான பிரச்னைக்கு தீர்வு காணும் கும்ப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
பகைவரால் உண்டான பிரச்னைக்கு தீர்வு காணும் கும்ப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்றாலும், உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். பரணி: பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். கார்த்திகை 1: தாய்வழி உறவினர்களால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். வழக்கின் முடிவு தள்ளிப்போகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ரோகிணி: உறவினர்கள் உங்கள் உதவிக்காக வீடு தேடி வருவார்கள். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும். திருவாதிரை: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புனர்பூசம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். 

கடகம்

புனர்பூசம் 4: கவனக் குறைவால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். பணியிடத்தில் நிதானம் அவசியம். பூசம்: வேலைப்பளு கூடும். மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். செயல்களில் விழிப்புணர்வு தேவை. ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை எட்ட முடியாமல் போகும். 

சிம்மம்

மகம்: பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. புதிய முயற்சிகளும், வேறு சிந்தனையும் இன்று வேண்டாம். பூரம்: திடீரென்று வீண் செலவுகள் ஏற்படும். விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்க முடியும். உத்திரம் 1: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். 

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வருமானம் இன்று வந்து சேரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். அஸ்தம்: முன்பு செய்த முதலீடு ஒன்றில் இருந்து எதிர்பாராத லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும். சித்திரை 1,2: சிந்தித்து செயல்படுவீர்கள். முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள். வருவாய் அதிகரிக்கும். 

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். கோபத்தை தவிர்ப்பது நன்மையாகும். சுவாதி: புதிய வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3: பிறருடன் அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் திறமையால் ஒரு செயலில் ஆதாயம் காண்பீர்கள். பகைவர்கள் விலகிச் செல்வார்கள். அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் கேட்ட உதவிகள் கிடைக்கும். கேட்டை: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர்கள். 

தனுசு

மூலம்: முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பூராடம்: உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் காணாமல் போவார்கள் என்பதால் கவனம் தேவை. உத்திராடம் 1: உத்தியோகத்தில் எதிர்ப்பு வலுக்கும். அமைதி காப்பது உங்களுக்கு நன்மையாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: புதிய நண்பர் ஒருவரால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். திருவோணம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நன்மை அடைவீர்கள். அவிட்டம் 1,2: மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: மறைமுகமாக தொல்லை கொடுத்து வந்தவர்களை கண்டறிந்து விலக்குவீர்கள். செல்வாக்கு உயரும். சதயம்: பகைவரால் உண்டான பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். 

மீனம்:

பூரட்டாதி 4: உறவினர் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உத்திரட்டாதி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். ரேவதி: எதிர்பாராத வருமானம் வந்து சேரும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.