மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்
மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தின் சில கிராமங்களில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 3 பேர் குழந்தைகள்.
மால்டாவின் பழைய நகரத்தில் ஒருவர் இறந்தார், மற்ற ஆறு நபர்கள் கலியாசக் பகுதியில் இறந்தனர். அடையாளம் காணப்பட்ட கிருஷ்னோ சவுத்ரி (வயது 65), உம்மி குல்சும் (வயது 6), தேபோஸ்ரீ மண்டல் (வயது 27), சோமித் மண்டல் (வயது 10), நஜ்ருல் எஸ்.கே. (வயது 32), ரோபிஜன் பீபீ (வயது 54) மற்றும் ஈசா சர்க்கார் (வயது 8)ஆகும்.
இது தவிர, மின்னல் தாக்கி 9 கால்நடைகள் இறந்துள்ளன. மேலும், மால்டா நகரின் பங்கிதோலா பகுதிக்கு அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் பள்ளி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 12 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் பங்கிதோலா கிராமப்புற மருத்துவமனை மற்றும் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாக மால்டா மாவட்ட மாஜிஸ்திரேட் நிதின் சிங்கானியா தெரிவித்தார்.