சென்னையின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக மாறிய காவேரி மருத்துவமனை

#Tamil Nadu #Hospital #Chennai
Prasu
1 year ago
சென்னையின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக மாறிய காவேரி மருத்துவமனை

சென்னையின் மிகப்பெரிய சங்கிலித் தொடர் மருத்துவமனைகளைக் கொண்டுள்ள ஸ்ரீ காவேரி மெடிக்கல் கேர் இந்தியா லிமிடெட் (காவேரி மருத்துவமனை) வடபழனியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையினை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான 'காவேரி மருத்துவமனை' டாக்டர் எஸ். சந்திரகுமார் மற்றும் டாக்டர். எஸ். மணிவண்ணன் அவர்களால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள மருத்துவச் சந்தையை நோக்கமாக வைத்து தொடங்கப்பட்டது. 

கடந்த இரண்டு தலைமுறைகளாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை, உறுதியான காலடி தடம் பதித்ததன் விளைவாக தென்னிந்தியாவில் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக பிரபலமடைந்திருக்கிறது. 

999ல் 30 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக செயல்படத் தொடங்கிய kauvery hospitals தற்போது சென்னை, திருச்சி, பெங்களூரு, சேலம், ஓசூர், திருநெல்வேலி என 6 நகரங்களில் 2000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை குழுமமாக வளர்ச்சி பெற்றுள்ளது. 

இதய சிகிச்சை, புற்றுநோயியல், நரம்பியல், சிறுநீரக அறிவியல், எலும்பியல், உறுப்பு மாற்று சிகிச்சைகள் போன்றவற்றில் உயர் தர சிகிச்சைகளை இந்த மருத்துவமனைகளின் நெட்வொர்க் வழங்குகிறது. 

காவேரி மருத்துவமனை சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் ரேடியல் சாலையில் உள்ள படுக்கை வசதியுடன், தற்போது சென்னை வடபழனியின் 200+ படுக்கை வசதியை கொண்ட ஃபோர்டிஸ் மருத்துவமனையை கைப்பற்றுவதன் மூலம் 750+ படுக்கை வசதி கொண்ட சென்னையின் இரண்டாவது பெரிய மருத்துவமனை குழுமமாக உயர்ந்துள்ளது. 

இது அடுத்த 18 மாதங்களில் 1000+படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக காவேரி விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையின் முக்கிய அடியாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!