பண விவகாரத்தில் அதிஷ்டம் கிட்டவுள்ள இரு ராசியினர் , அதிலும் துலா ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
பண விவகாரத்தில் அதிஷ்டம் கிட்டவுள்ள இரு ராசியினர் , அதிலும் துலா ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றைய சங்கடங்கள் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். பரணி: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: குடும்ப சொத்தில் இருந்த பிரச்னைக்கு பேசி தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: துணிச்சலாக செயல்பட்டு வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள். ரோகிணி: திடீர் பயணத்திற்கு வாய்ப்புண்டு. செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். மிருகசீரிடம் 1,2: எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம். மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீண்டநாள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். திருவாதிரை: சகோதரர்கள் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். புனர்பூசம் 1,2,3: தைரியமுடன் செயல்பட்டு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: இரண்டு நாளாக மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். முயற்சி பலிதமாகும். பூசம்: வரவேண்டிய பணம் இன்று வந்து சேரும். கடன்களை அடைப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். ஆயில்யம்: முந்தைய அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் இருந்த தடை அகலும் என்றாலும், செயல்களில் எச்சரிக்கை அவசியம். பூரம்: செலவுகள் கட்டுக்குள் வரும். யோசித்து செயல்பட நன்மை அதிகரிக்கும். உத்திரம் 1: குழப்பம் விலகும். கவனமுடன் செயல்பட்டு பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகும். அஸ்தம்: நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த ஒரு பொருள் இன்று உங்கள் கைகளில் கிடைக்கும். சித்திரை 1,2: எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் தோன்றும்.

துலாம்:

சித்திரை 3,4: எதிர்பார்த்த பணம் இன்று வந்து சேரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுவாதி: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசு வகையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். விசாகம் 1,2,3: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும். 

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பாராத வரவு வந்து சேரும். அனுஷம்: தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் நன்மை காண்பீர்கள். பெரியோர் ஆதரவு மகிழ்ச்சி தரும். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பூராடம்: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். குலதெய்வ அருளால் உங்கள் முயற்சி நிறைவேறும். உத்திராடம் 1: தடைகள் விலகும். கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகலாம் என்பதால் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். திருவோணம்: கடவுள் வழிபாடு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். செயல்களில் எச்சரிக்கை அவசியம். அவிட்டம் 1,2: புதிய முயற்சிகளில் விழிப்புணர்வு அவசியம். உங்கள் தனித்திறனால் ஒரு செயலை முடிப்பீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சதயம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று எளிதாக நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆதாயமாகும். வருமானம் அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். உத்திரட்டாதி: வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த ஒரு முயற்சியை மீண்டும் தொடர்வீர்கள். ரேவதி: பணப்புழக்கம் கூடும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்தும்.