தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தில் அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு

#India #School #Tamil People #Tamilnews #money
Mani
1 year ago
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தில் அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு

தமிழகத்தில் எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2026ம் ஆண்டு வரை கட்டணத்தை நிர்ணயம் செய்ய, அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு கடந்த கல்வியாண்டில் இருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. குறிப்பாக, எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, 6 ​​ஆயிரம் ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். இதனுடன் ஒப்பிடுகையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு முன்பு கட்டணம் 12 ஆயிரத்து 76 ரூபாயாக இருந்தது, ஆனால் புதிய கட்டணம் 12 ஆயிரத்து 659 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

6 முதல் எட்டாம் வகுப்பு வரை பழைய கட்டணம் 15 ஆயிரத்து 711 ரூபாய் ஆக இருந்த நிலையில், புதிய கட்டணம் 16 ஆயிரத்து 477 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.