பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பெரியோர் ஆலோசனையால் உங்கள் செயல் வெற்றியாகும். பரணி: மனதில் நினைத்ததை செயல்படுத்தி மகிழ்ச்சி காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீண்ட நாளாக தள்ளி வைத்த வேலையில் இன்று கவனம் செலுத்துவீர்கள். அலைச்சல் கூடும். ரோகிணி: அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். கவனமுடன் செயல்படுவதால் லாபம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: பகைவர்களின் தொல்லை விலகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நேற்று மேற்கொண்ட ஒரு முயற்சி இன்று நிறைவேறும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். திருவாதிரை: எதிர்பார்த்த செய்தி ஒன்று வந்து சேரும். சகோதரர்கள் வழியில் நன்மை உண்டு. புனர்பூசம் 1,2,3: தைரியமாக செயல்படுவீர்கள். விஐபிகள் ஆதரவுடன் உங்கள் முயற்சி ஒன்று நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள். நன்மை அதிகரிக்கும். பூசம்: உங்களை விட்டு விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். நிதிநிலை உயரும். ஆயில்யம்: புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் ஒரு எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்

மகம்: தொழில் ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும். பூரம்: ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் குழப்பம் தோன்றும். உத்திரம் 1: உங்கள் செயல்கள் இழுபறியாகும். தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். பேச்சில் கவனம் தேவை. அஸ்தம்: யோசித்து செயல்பட்டாலும் திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடப்படுவீர்கள். நிதானம் காப்பது அவசியம். சித்திரை 1,2: அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவுகள் செய்வீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: வராமல் இருந்த ஒரு தொகை இன்று உங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். விசாகம் 1,2,3: உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பணத்திற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடுவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். அனுஷம்: நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்காலம் குறித்த எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கேட்டை: குடும்பத்தினர் விருப்பத்தைக் கேட்டு செயல்படுவீர்கள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.

தனுசு

மூலம்: குடும்பத்திற்குள் உண்டான குழப்பம் விலகும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். உத்திராடம் 1: சேமிப்பு உயரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் செயல்களில் முழுமையான கவனம் தேவை. எந்த ஒன்றிலும் அவசரத்தை தவிர்க்கவும். திருவோணம்: மற்றவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். அவிட்டம் 1,2: வேலைகளில் உண்டான குழப்பம் நீங்கும். உங்கள் முயற்சிக்கேற்ற பலன் உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் திறமை இன்று வெளிப்படும். சகபணியாளர்கள் உங்களை பாராட்டுவார்கள். சதயம்: உங்களைத் தேடி முக்கிய பொறுப்புகள் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: தம்பதிகளுக்குள் இருந்த சங்கடம் நீங்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

மீனம்

பூரட்டாதி 4: நீங்கள் எதிர்பார்த்தவற்றை இன்று அடைந்து மகிழ்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவார்கள். ரேவதி: வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். பண வரவு திருப்தி தரும்.