எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதை வெளிப்படையாக தெரிவித்த இயக்குனர்

#Cinema #Actor #Lanka4
Kanimoli
1 year ago
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதை வெளிப்படையாக தெரிவித்த  இயக்குனர்

டிஆர்பி-யில் தற்போது தும்ஸம் செய்து கொண்டிருக்கும் சீரியல் தான் சன் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் கூட்டம் பெருகிவிட்டது. 

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குணசேகரனுக்காகவே இந்த சீரியலை பலரும் பார்க்கின்றனர். என்னதான் இவர் சீரியலில் வீட்டில் இருக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தினாலும், குணசேகரன் உடம்பில் ஊறிப்போன நக்கல் நையாண்டி பேச்சுதான் எதிர்நீச்சல் சீரியலின் ஹைலைட். இவர் சொல்ற ‘யம்மா ஏய்’ என்று டயலாக் அவங்க வீட்டுப் பெண்களை மட்டுமல்ல சீரியலை பார்ப்பரையும் நடு நடுங்க வைக்கும். 

அப்படிப்பட்ட குணசேகரன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்ற சீக்ரெட்டை சமீபத்திய பேட்டி திருச்செல்வம் உடைத்திருக்கிறார். திருச்செல்வம் இயக்கும் சீரியல்கள் எல்லாம் தெற்கு பகுதியில் வாழும் மக்களை அப்படியே பிரதிபலிக்கும். ஆகையால் அவருடைய சீரியலின் படப்பிடிப்பின் லொகேஷனுக்காக ஊர் ஊராக சுற்றும் போது, அவருடைய நண்பர் ஒரு வீட்டிற்கு எதார்த்தமாக அழைத்துச் சென்றார். அந்த வீட்டிற்குள் செல்லும் போது ஏதோ ஒரு வித்தியாசத்தை திருச்செல்வதால் பார்க்க முடிந்தது. 

அங்கு குணசேகரன் கதாபாத்திரம் உருவாவதற்கு காரணமான உண்மையான குணசேகரனை பார்த்திருக்கிறார். அவர் ரொம்ப மோசமான மனிதன் கிடையாது. மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்ததால், தன்னை ஒரு கரடு முரடானவராகவும் முற்போக்கு குணம் கொண்டவராகவும் மாற்றி கொண்டு அதில் பாதுகாப்புத் தேடுகிறார்.

 அவருடன் திருச்செல்வம் பேசி பழகும் போது இந்த கேரக்டரை தன்னுடைய சீரியலில் கொண்டுவரப் போகிறேன் என்று அவரிடமும் அனுமதி வாங்கி விட்டாராம். குணசேகரனை சீரியலில் பார்க்கவே எரிச்சலாக இருக்கும் போது அப்படி ஒரு மனிதன் ரியல் லைஃபில் திருச்செல்வம் கண்முன்னே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 அதுமட்டுமல்ல விரைவில் உண்மையான குணசேகரனை ரசிகர்களுக்கும் காட்ட விரும்புவதாகவும், அடுத்து சன் விருது வழங்கும் விழாவில் நிஜ வாழ்க்கையில் குணசேகரனாக வாழ்ந்து கொண்டிருப்பவரை காட்டப் போவதாகவும் திருச்செல்வம் அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடையே வைரலாக பேசப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!