தினமும் பாலும் பேரீச்சம் பழமும் உட்கொள்ளல் உடலின் ஊட்டச்சத்திற்கு உகந்தது
உடலில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் வந்து சேர இலகுவான வழி பாலும் பேரீ்ச்சம் பழமும் சாப்பிடுதலாகும்.
இவ்வாறு நாம் தினமும் பாலுடன் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வர நம் உடலில் ஏற்படும் நன்மைகளை யாதுவென இன்று பார்க்கலாம்.
பால்-பேரீச்சம் பழத்தில் புரதம் அதிகம் செறிந்துள்ளதால் வலுவான மற்றும் உறுதியான தசைகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழம் சாப்பிடும் போது உங்கள் வயிற்றின் முழுமையை உறுதிசெய்யும் அதேவேளை எடுக்கும் உணவை சிக்கனமாக எடுக்க வைக்கும்.
பாலில் ஊறவைத்த பேரீச்சம பழம் ஆண்-பெண் இருவரினதும் பாலின ஓமோன்களை சுரக்கச் செய்து பாலியல் ஆரோக்கியத்தை காக்கும்.
மேலும் இந்த இந்த கலவை குளுக்கோஸ், உடல் ஆற்றல் இழப்பை கட்டுப்படுத்தி, உங்களை புத்துணர்ச்சியுடன் நாள் தோறும் வைத்திருக்கும்.
பேரீச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது இரும்புச் சத்து சேர்க்கப்பட்டு இரத்த சோகை பிரச்சினையை தீர்க்கும்.
அத்துடன் இக்கலைவையானது விற்றமின் பி6 கொண்டிருப்பதனால் மூளை ஆரோக்கியம் பெறும். அந்த வகையில் மாணாக்கர்களுக்கு இது நினைவாற்றலை நன்கு தரும்.
பாலில் கல்சியம் அதிகம் காணப்படுவதாலும் அதே நேரம் பேரீ்ச்சம் பழத்தில் அதிக இரும்புச்சத்து இருப்பதாலும் என்புகளுக்கு இது மிகவும் சிறந்தது.