வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை காண முடியாமல் போகும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை காண முடியாமல் போகும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள். நீண்ட நாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். பரணி: குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கார்த்திகை 1: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். ரோகிணி: வருவாயில் இருந்த தடை நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தடைகளை சரி செய்து வெற்றி அடைவீர்கள். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புனர்பூசம் 1,2,3: சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். 

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பூசம்: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். ஆயில்யம்: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். 

சிம்மம்

மகம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்படும். பூரம்: வேலை பளு அதிகரிக்கும். பல வழியிலும் நெருக்கடி உண்டாகும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். 

கன்னி:

உத்திரம் 2,3,4: பணத் தட்டுப்பாட்டின் காரணமாக முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை காண முடியாமல் போகும். சித்திரை 1,2: மாலை வரை வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும், அதன்பின் நிலைமை சீராகும். 

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். சுவாதி: புதிய வீடு கட்டும் முயற்சியை சிலர் மேற்கொள்வீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். விசாகம் 1,2,3: நண்பரால் ஆதாயம் காண்பீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அனுஷம்: தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும். கேட்டை: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வெளியூர் பயணம் லாபமாகும். மகிழ்ச்சி கூடும். 

தனுசு

மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூராடம்: பெரியோரின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்திராடம் 1: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நீண்ட நாள் பிரச்னைக்கு முடிவு ஏற்படும். செயல்களில் உண்டான நெருக்கடி நீங்கும். திருவோணம்: முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும். அவிட்டம் 1,2: அலைச்சல் அதிகரிக்கும். வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். பொறுமை காப்பது நல்லது. 

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்றைய பிரச்னை ஒன்று இன்றும் தொடரும். மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். சில தடைகளை சந்தித்தாலும் உங்கள் திறமையால் எண்ணியதை அடைவீர்கள். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் தொடங்குவதற்காக நண்பர்களின் ஆலோசனைகளை கேட்பீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4: குடும்பப் பிரச்னை தீரும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட உறவினர்கள் மனம் மாறுவார்கள். உத்திரட்டாதி: எதிர்பார்த்த வரவால் நெருக்கடிகள் நீங்கும். புதிய முயற்சி ஒன்று வெற்றியாகும். ரேவதி: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அக்கம்பக்கத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.