இன்றைய முயற்சியை ஒத்தி வைக்கும் ரிஷப ராசியினர் - ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
இன்றைய முயற்சியை ஒத்தி வைக்கும் ரிஷப ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: எதிர்ப்புகள் விலகும். சுறு சுறுப்புடன் செயல்பட்டு நினைத்ததில் வெற்றி காண்பீர்கள். பரணி: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர் ஆதரவுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். ரோகிணி: பெரியோர் வழியே நல்ல செய்தி வரும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள். மிருகசீரிடம் 1,2: கடனாக கேட்டிருந்த தொகை வந்து சேரும். இன்றைய முயற்சியை ஒத்தி வைப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்ப்புகள் நிறைவேறி உற்சாகமுடன் செயல்படுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவாதிரை: பிரபலங்களின் ஆதரவுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்கள். வரவு அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். சகோதர வகையில் ஆதரவு அதிகரிக்கும். பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பழைய முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம்: லாப சிந்தனை மேலோங்கும். அதற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பரால் உதவி உண்டு

சிம்மம்

மகம்: மனதில் தெளிவு பிறக்கும். தடைபட்ட செயல் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பூரம்: எதிர்பாராத வருமானம் ஏற்படும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். மனஅழுத்தம் கூடும். கவனமுடன் செயல்படவும். அஸ்தம்: மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். அத்தியாவசிய செயலில் முயற்சியை மேற்கொள்வீர்கள். சித்திரை 1,2: பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வரவு செலவில் எச்சரிக்கை தேவை. சுவாதி: தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். வரவு செலவில் கவனம் தேவை.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அனுஷம்: குடும்ப நலனுக்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். கேட்டை: பகைவரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பர்களால் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

தனுசு

மூலம்: வழிபாட்டில் மனம் செல்லும். வியாபாரத்தை மாற்றம் செய்ய திட்டமிடுவீர்கள். பூராடம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வருமானம் கூடும். உத்திராடம் 1: பெரியோர் ஆசியால் செயலில் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: கடவுளின் அருளால் இரண்டு நாளாக இருந்த சங்கடம் விலகும். பண வரவு மகிழ்ச்சி தரும். திருவோணம்: நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று முடிவிற்கு வரும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு இன்று உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிரிகளால் சில சங்கடங்கள் தோன்றும். சதயம்: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். செயல்களில் நிதானம் அவசியம். பூரட்டாதி 1,2,3: முயற்சி இழுபறியானாலும் கடைசி நேரத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மீனம்

பூரட்டாதி 4: செயலில் இருந்த தடை விலகும். நண்பர்கள் துணையுடன் ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ரேவதி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். மகிழ்ச்சி கூடும்.