"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
உலகில் பலகோடி மொழிகள் இருந்தாலும் தனித்தன்மை கொண்ட பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட மொழிதான் தமிழ் மொழி. குமரி கண்டத்தில் தோற்றம் பெற்றமொழிகளில் மூத்த மொழியாகும். மனிதன் தன்னுடைய உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள மொழி ஒரு முக்கிய அம்சமாக அமைகிறது வேடர்யுகத்தில் வாழ்ந்த மனிதன் ஒலியெழுப்புவதன் மூலமும் அதன் பின்னர் வாழ்ந்த மனிதன் சைகை மூலமும் தனது கருத்துக்களை பரிமாறினான்.
பின்னர் அவற்றுக்கு வரி வடிவம் கொடுக்கப்பட்டு எழுத்துக்கள் உருவாக்கப்படடமை குறிப்பிடத்தக்கது று தமிழானது பல்வேறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய நவீன வடிவத்தை எட்டியுள்ளது. தமிழின் பெருமையை “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி பிறந்த மூத்தகுடி” என்று குறிப்பிடுவதனூடாக இந்த உலகம் தோற்றம் பெற்றபோதே தமிழும் தோன்றிவிட்டதாக கூறப்படுகின்றன.
இவ்வாறே தொன்மை வாய்ந்த தமிழானது பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டது. எங்கெங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது அந்த அளவிற்கு உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் தமிழர்கள் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார்.
தமிழில் உள்ள எழுத்துகளின் ஒலிகள் இயற்கை நடையிலும் மிக எளிமை முறையிலும் அமைந்திருப்பதால் எந்த சிக்கலின்றி தமிழ் மொழியை அனைவராலும் இலகுவாக பேச எழுத முடிகிறது தமிழ் மொழியில் மிக பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியம் இலக்கணமானது எழுத்து, சொல், பொருள் போன்ற மூன்று இலக்கணத்தினையும் கூறுவதால் தமிழ் மொழியில் தொல்காப்பியம் சிறந்து விளங்கக்கூடிய நூலாக இருக்கிறது.
இன்றைய இந்த காலக்கட்டிடத்தில் ஆங்கில மொழியின் மோகம் ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பால் அன்றாட செயற்பாடுகளில் ஆக்கிரமிப்பதாலும் தமிழ் தேய்மானமடைகிறது என்றே கூற வேண்டும். இந்த நிலைய மாற வேண்டுமானால் தமிழ் மொழியின் சிறப்பை சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தல் வேண்டும். செம்மொழியாகய்ய தமிழ் மொழியை பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று பறைசாற்றினார் பாவேந்தர் பாரதிதாசன் அவரின் கோட்பாட்டுக்கு இணங்க தனித்துவம் மிக்க தமிழை போற்றுவோம்
-சிந்து-