போதைப்பொருள் வழக்கில் சுரேகா வாணி விளக்கம் அளித்தார்
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான கே.பி.சௌத்ரி சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். கோவாவில் நைஜீரிய நபரிடம் இருந்து போதைப் பொருட்களை வாங்கி ஐதராபாத்தில் சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சைபராபாத் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். கூடுதலாக, ரஜினிகாந்தின் கபாலி படத்தின் தெலுங்கு பதிப்பின் வெளியீட்டை அவர் மேற்பார்வையிட்டார்.
இவர் கைதாகியிருப்பது டோலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பியது. மேலும் போலீசார் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. இவர் பல்வேறு டோலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுடன் வாட்ஸ்அப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதோடு நைஜீரியாவை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த வழக்கில் நடிகை சுரேகா வாணி, ஜோதி மற்றும் அஷூ ரெட்டி ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின. மேலும் கைதான தயாரிப்பாளரும் சுரேகா வாணியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலானது. இதையடுத்து நடிகை அஷூ ரெட்டி, இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டு இது பொய்யான தகவல் என விளக்கமளித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த நடிகை சுரேகா வாணியும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: என் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எங்கள் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, எங்கள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது, எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து எங்கள் பெயரை இதில் இழுக்க வேண்டாம், இந்த சர்ச்சைகள் என்றார்.