குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்ளும் மீன ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்ளும் மீன ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செயல்களில் இன்று ஆதாய நிலை உண்டாகும். பரணி: நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கார்த்திகை 1: நினைத்ததை சாதித்து முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள். புதிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். செயல்கள் லாபமாகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். ரோகிணி: தடைகளை எல்லாம் சரி செய்வீர்கள். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். அதற்கேற்ற வரவும் ஏற்படும். திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் உண்டு. சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புனர்பூசம் 1,2,3: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். சொத்து வகையிலான சிக்கல் தீரும்.

கடகம்

புனர்பூசம் 4: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். பூசம்: நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். ஆயில்யம்: தாய்வழி உறவினரிடம் உண்டான சங்கடங்கள் விலகும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

மகம்: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். லாபமான நாள். பூரம்: பழைய பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உத்திரம் 1: உங்கள் திறமை வெளிப்படும் நாள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவுகளில் இருந்த தடைகள் அகலும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சித்திரை 1,2: சிலருக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: குரு சந்திர யோகத்தால் உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்தது நிறைவேறும். சுவாதி: குடும்ப நலனுக்காக ஒரு முடிவை துணிச்சலுடன் மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உண்டு.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அனுஷம்: வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாக வாய்ப்பு இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. கேட்டை: வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் செலவுகளை சந்திப்பீர்கள்.

தனுசு

மூலம்: எதிர்பாராத வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நன்மையான நாள். பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உத்திராடம் 1: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். திருவோணம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வர். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த ஒரு செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். நெருக்கடி நீங்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சதயம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வரும். வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை தீரும். பூரட்டாதி 1,2,3: நிறைவேறாது என்று நீங்கள் நினைத்திருந்த ஒரு முயற்சி இன்று எளிதாக நிறைவேறும்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவதால் உங்கள் முயற்சி நிறைவேறும். உத்திரட்டாதி: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். உங்கள் மனம் நினைப்பதை செயல்படுத்த முடியாமல் போகும். ரேவதி: முயற்சிக்கேற்ற வருமானம் உண்டு. குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்.