தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் சிங் தெரிவித்தார்.

#India #prices #Minister #union
Mani
1 year ago
தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் சிங் தெரிவித்தார்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், கர்நாடக மாநிலம் பெல்லாரி ஆகிய இடங்களில் தக்காளி அதிகபட்சமாக கிலோ ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தலைநகர் டெல்லியில் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், தக்காளி அதிகளவில் அழுகும் பொருளாக இருப்பதால், எதிர்பாராத மழை பெய்த பகுதிகளில் அவற்றின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது என்றும் பொதுவாக இந்த சீசனில் ஏற்படும் என்றும் அவர் விளக்கினார். விரைவில் தக்காளி விலை குறையும் என உறுதி அளித்தார்.