மதுரை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயிலும், அதைத் தொடர்ந்து மதுரை மல்லிகைப்பூவும்தான். மதுரை மல்லிகை எப்போதுமே அதன் தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளது, அதன் விலை திருவிழாக்கள் மற்றும் மங்களகரமான நிகழ்வுகளின் போது மிக உயர்ந்த புள்ளியை எட்டும்.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. விற்பனைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மதுரை மல்லிகை கிலோ ரூ.200ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பிச்சி போன்ற பிற பூக்களின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.400க்கும், பிச்சி பூ கிலோ ரூ.500க்கும், சம்மங்கி ரூ.120க்கும், பட்டன் ரோஸ் ரூ.200க்கும், சாமந்தி பூ ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.