நம் உடம்பில் விற்றமின் சி குறைந்துள்ளதைக் காட்டும் அறிகுறிகள்
நம் உடலின் நோய் எதிரிப்பு சக்திக்கு அவசியமான ஊட்டச்சத்தாக பார்க்கப்படும் விற்றமின் சி-ன் குறைபாட்டை நமக்கு தெரியப்படுத்தும் அறிகுறிகள் பற்றி இன்று நாம் காணலாம்.
உடலில் விற்றமின் சி குறைவாக இருக்கும் போது உடலில் உண்டாகும் காயங்கள் முக்கியமாக இரத்த காயங்கள் ஆறுவதற்கு காலம் எடுக்கும்.
சருமத்தில் வறட்சி, பருக்கள், சுருக்கங்கள் என பல பிரச்சனைகைள காணலாம். இதற்கு விற்றமின் சியின் குறைவினால் ஏற்படும் கொலஜன் பற்றாக்குறையேயாகும்.
விற்றமின் சி யானது நோய்எதிர்ப்பு சத்தியை தருவதால் இதன் குறைபாட்டால் அடிக்கடி கிருமித்தொற்றால் சளி காய்ச்சல் உண்டாகும்.
விற்றமின் சி குறையாடு காரணமாக எலும்புகள், மூட்டுக்கள் பலவீனமடையும். இது குறிப்பாக வயது வந்தவர்களுக்கு எற்படும்.
நகத்தில் விற்றமின் சி குறைபாட்டால் சிவப்பு கோடுகள் உண்டாக காரணமாக அமைகிறது.
ஆய்வுகளின் படி விற்றமின் சி குறைபாட்டுக்கும் இரத்தசோகைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதே நேரம் இரத்தசோகையுடன் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.
வாயின் முரசில் இரத்தக்கசிவு உண்டாவதும் விற்றமின் சி குறைபாட்டிற்கு ஒரு பொதுவான அறிகுறியாகும்.