வாழைப்பூ கூட்டு செய்வது எப்படி

#Recipe #Cooking #Tamil #How_to_make
Mani
2 years ago
வாழைப்பூ கூட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

6 மடல் வாழைப் பூ

1/2 கப் துவரம் பருப்பு

8 சின்ன வெங்காய்ம்

1 தக்காளி

1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி

3 ஸ்பூன் தேங்காய் துருவல்

10 பல் பூண்டு

2 பச்சை மிளகாய்

1 ஸ்பூன் சீரகம்

1 ஸ்பூன் சோம்பு

செய்முறை:

வாழைப்பூவை நரம்பை நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். நறுக்கிய பீவை மோரில் போட்டு வைப்பதால் அவை கருத்துவிடாமல் இருக்கும். பூண்டு, சீரகம், சோம்பு, தேங்காய் துருவலை விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து கருவேப்பிலை தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துவதக்கவும்.

நன்கு வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு சேர்த்து இந்த கலவையுடன், தேங்காய் விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4