கதாநாயகர்களை மிஞ்சும் அளவுக்கு வில்லனாக ரகுவரன் மிரட்டிய 5 படங்கள்

#Cinema #Actor #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
கதாநாயகர்களை மிஞ்சும் அளவுக்கு வில்லனாக ரகுவரன் மிரட்டிய 5 படங்கள்

தமிழ் சினிமாவில் வில்லனுக்கு பெயர் போன முக்கியமான நடிகர் தான் ரகுவரன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் ஹீரோவுக்கு நிகராக வில்லனாக நடித்து சாதித்த 5 படங்களை பற்றி பார்ப்போம். அதிலும் இவர் ரஜினியுடன் மார்க் ஆண்டனி ஆக நடித்ததை இன்று வரையிலும் மறக்க முடியாது. 

 புரியாத புதிர்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமானுக்கு வில்லனாக ரகுவரன் மிரட்டிய படம் தான் புரியாத புதிர். இந்த படத்தில் ரகுவரனின் நடிப்பு அல்டிமேட் ஆக இருக்கும். பார்ப்பதில் மட்டுமல்ல தன்னுடைய செயல்களிலும் படு வில்லத்தனத்தை காட்டக்கூடிய சக்கரவர்த்தி என்ற கேரக்டரில் நடித்து மிரட்டி இருப்பார். இதில் சக்கரவர்த்தி ஒரு சாட்டிஸ்டாக பெண்களின் மீது வெறுப்பு கொண்டவர். அதற்கு காரணம் குழந்தை பருவத்தில் தனது மாற்றாந்தாய் மூலம் அவர் சந்தித்த கஷ்டங்கள் தான் என்றும் அந்த படத்தில் விளக்கம் அளித்திருப்பார்கள். இந்த படத்தில் ரகுவரனின் நடிப்பு ரகுமானை மிஞ்சும் அளவுக்கு இருந்தது.

 பாட்ஷா: ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படம் தான் பாட்ஷா. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினி வந்ததுமே ரகுவரனின் நடிப்பை பார்த்து அவருக்குள்ளே ஒரு பதட்டம் ஏற்பட்டதாகவும் சில பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். இதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. ஏனென்றால் ஒரு படத்திற்கு தரமான வில்லனைப் போட்டால் சர்வ சாதாரணமாக அந்த படம் ஹிட் அடித்து விடும், அப்படி தான் இதில் மார்க் ஆண்டனி ஆக நடித்த ரகுவரனின் நடிப்பு மிரள வைக்கும் அளவுக்கு இருந்தது. பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியின் கம்பீரமான குரலை இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது. 

 காதலன்: பிரபுதேவா, நக்மா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் காதலன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரகுவரன் ‘மாலி’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். இதில் இவர் காட்டிய வில்லத்தனம் கதாநாயகன் பிரபுதேவாவிற்கு மட்டுமல்ல படத்தை பார்ப்போரையும் மிரட்டியது. இதில் ரகுவரனின் நடிப்பு கதாநாயகனாக நடித்த பிரபுதேவாவையே மிஞ்சும் அளவுக்கு இருந்தது.

 முதல்வன்: அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் முதல்வன். இந்த படத்தில் ரகுவரன் வயதான முதலமைச்சராக அரங்கநாதர் ஆக நடித்தார். இதில் தொலைக்காட்சி செய்தியாளரான அர்ஜுன் முதலமைச்சரை பேட்டி எடுக்கும் போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி ஒரு நாள் முதல்வர் ஆக ஆக்ஷன் கிங் பதவியேற்பார். அதன் பிறகு அர்ஜுன் மற்றும் ரகுவரனுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்த படத்தின் ஹைலைட். இதில் தன்னுடைய தனித்துவமான குரலில் ரகுவரன் மோசமான வில்லனாக நடித்தார். அதுதான் அர்ஜுனுக்கும் பயங்கர டஃப் கொடுத்தது.

 உயிரிலே கலந்தது: ரீல் ஜோடி ரியல் ஜோடியான சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் தான் உயிரிலே கலந்தது. இந்த படத்தில் சூர்யாவின் அண்ணனாக ரகுவரன் நடித்து தனது வில்லத்தனத்தை காட்டிருப்பார். மூத்த மகனாக இருக்கும் ரகுவரனுக்கு அம்மா, அப்பா பாசம் கிடைக்காததால், சூர்யாவிற்கு மட்டும் அது கிடைக்கிறது என அவரை ஒரு உயரமான இடத்திற்கு கூட்டிச்சென்று தள்ளிவிட்டு வருகிறார். ஆனால் சூர்யா ஒரு குன்றின் விழுந்தில் தப்பிக்கிறார். இவ்வாறு ஒரு குடும்ப உறுப்பினராகவே இருந்து கொண்டு ரகுவரன் செய்த வில்லத்தனம் பார்ப்பதற்கே பயமுறுத்தும் அளவுக்கு இருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!