தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தரை நேரடியாகவே தாக்கி பேசிய ரஜினி : நடந்தது என்ன?

#Accident #TamilCinema #Lanka4 #rajini kanth
Kanimoli
1 year ago
தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தரை நேரடியாகவே தாக்கி பேசிய ரஜினி : நடந்தது என்ன?

ரஜினி பல மேடைகளில் தனது துணிச்சலான பேச்சால் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். எதற்கும் பயப்படாத அஞ்சா நெஞ்சன் என்றே சொல்லலாம். அப்போதே சினிமாவை தாண்டி அரசியல் விஷயங்களையும் வெட்ட வெளிச்சமாக ரஜினி பேசியிருக்கிறார். இந்நிலையில் ரஜினி தயாரிப்பாளர் பற்றி பேசிய விஷயம் தான் இப்போது வைரலாகி வருகிறது.

 அதாவது ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் அண்ணாமலை படமும் ஒன்று. பாலச்சந்தரின் கவிதாலயா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இப்படம் வெளியாகி இருந்தது. ரஜினி, சரத் பாபு, குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் விழாவில் ரஜினி பேசிய போது விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். 

அதாவது இந்த படத்திற்கு நான் நிறைய சம்பளம் கேட்டதாக கிருஷ்ணா கூறியிருந்தார். நான் கேட்டால் இந்த படம் எப்படி ஓடும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால் தான் கூடுதலாக சம்பளம் கேட்டேன். அதுவே இந்த படத்தால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களிடம் அந்த பணத்தை நான் திருப்பிக் கொடுக்கிறேன். ஆனால் லாபம் வந்தது என்றால் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்கள். ஒரு படம் நஷ்டமடைந்தால் வெளியில் சொல்லுவது போல், லாபம் பெற்றால் வெயில் செல்லும் போது தனக்கு சந்தோஷமாக இருக்கும் என்று ரஜினி அந்த விழாவில் கூறியிருந்தார். நீங்க நியாயமா இருந்தால் நானும் நியாயமாய் இருப்பேன்,

 நீங்க தப்பு செஞ்சா என்னோட வழி வேற வழி என்பது போல ரஜினி மாஸ் காட்டி பேசியிருந்தார். ரஜினியால் மட்டுமே இவ்வாறு தில்லாக பேச முடியும். ஏனென்றால் ரஜினி ஒரு படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்களின் நலன் கருதி அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொள்வார். இது அப்போது மட்டுமல்லாமல் தற்போது வரை பின்பற்றி வருகிறார். 100 கோடியை தாண்டி சம்பளம் பெற்ற ரஜினி தொடர் தோல்வியால் இப்போது ஜெயிலர் படத்திற்கு 70 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!