உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதி
இன்று, உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது, இதன் விளைவாக முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சாமோலி மாவட்டத்தில் உள்ள சின்கா அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7-ன் ஒரு பகுதி தடைபட்டுள்ளது, இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்கனவே சுமார் 15 கிமீ சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட சுமார் 200 பேர் சிக்கினர். மூன்று நாட்களுக்குப் பிறகு சாமோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் மழை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர், 34 பேர் காயம் அடைந்துள்ளனர், மேலும் 3 பேர் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியோகி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.