வழிமாறிப்போன இயக்குனரால் சோழியை முடித்துக் கொண்ட விக்ரம்
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரம் அடுத்ததாக தங்கலான் படத்தில் 30 வயது இளமையான தோற்றம், வயதான கதாபாத்திரம் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் சியான் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் ஒரு படத்தில் கமிட் ஆகி முழு படத்தையும் நடித்து முடித்திருக்கிறார் .
இதில் விக்ரம் தரப்பில் எந்த தப்பும் இல்லை, ஆனால் வழி மாறி போன இயக்குனர் செய்த செயலால் சியானின் சினிமா கேரியர் கேள்விக்குறியாகிறது. 2017ல் துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன் இயக்கி விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விக்ரமுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. உண்மையிலே இவர் கதையை வைத்துக்கொண்டு தான் படம் பண்ணுகிறாரா அல்லது கதையே இல்லாமல் குருட்டடியாய் படம் எடுத்துக் கொண்டிருக்கிறாரா என்று தோன்றியது. உடனே விக்ரம் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் கதை என்ன என்பதை சொல்லுங்கள் என உட்கார வைத்து கேள்வி கேட்டிருக்கிறார். அந்தக் கதையை கேட்டதும் சுத்தமாகவே விக்ரமுக்கு திருப்தி இல்லை.
அதோடு ஒதுங்கிய விக்ரம் அதன் பிறகு படப்பிடிப்பிற்கு வரவே இஷ்டப்படலை, இருப்பினும் வேறு வழி இல்லாமல் அவ்வப்போது படப்பிடிப்பிற்கு வந்து, கௌதம் மேனன் சொல்வதை நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படிதான் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்திருக்கிறது. சுத்தமாகவே கதை வலு இல்லாத துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு எப்படியோ நிறைவடைந்து ரிலீஸ் தேதியும் பலமுறை தள்ளிப் போனது. இறுதியாக வரும் ஜூலை 14ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே வசூலில் மண்ணை கவ்விவிடும் என்பது இப்பவே தெரிந்து விட்டது. இருப்பினும் இந்த படத்தை எப்படியோ தயாரித்து விட்டார்கள். படம் ரிலீஸ் ஆனால் வசூலை பெறுகிறதோ இல்லையோ எப்படியாவது வெளியில் தள்ளி விட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தான் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யப்போகின்றனர்.
அதே சமயம் கௌதம் மேனனுக்கு இப்போது படங்களை இயக்குவதில் காட்டினும் வில்லனாக நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார். அதனாலேயே இப்போது அவருக்கு சுத்தமாகவே டைரக்ஷன் வரலை. இருப்பினும் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி விட வேண்டும் என விக்ரமுடன் பெரும் வாக்குவாதத்தில் அந்த படத்தை முடித்து இருக்கிறார். ஆனால் இந்த படத்தினால் விக்ரம் கேரியர் பாழாய் போகப் போகிறது.