வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் தற்போதைய விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன.
இந்நிலையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.1937க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், ரூ.8 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாதம் ரூ.1945க்கு விற்கப்படுகிறது.
வணிக நோக்கங்களுக்காக எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து இரண்டு மாதங்களாக குறைவாகவே உள்ளது, இந்த மாதத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.