சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் பிரதமர் மோடி வரும் 7ம் தேதி தொடங்கி வைக்கிறார்

#India #Prime Minister #Thirumal #Train #Vande Bharat train
Mani
1 year ago
சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் பிரதமர் மோடி வரும் 7ம் தேதி தொடங்கி வைக்கிறார்

விரைவான ரயில் போக்குவரத்தை வழங்குவதற்காக நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாக உள்ளன. இந்த வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் மிக வேகமாகச் செல்லும் ரயில்களாக உள்ளன.

தற்போது, ​​தமிழ்நாட்டில் உள்ள சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மைசூர் மற்றும் கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் பாதையில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் மற்றும் திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இந்த ரயில் இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி வரும் 7ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்ட்ரல்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கும் விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரெயில் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.