எலான் மஸ்க்கின் புதிய டுவிட்டர் நிபந்தனை
இனி ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே டுவிட்டரை முழுவதுமாக பயன்படுத்த முடியும் என்றும், அதற்கேற்ப புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் விதித்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது டுவிட்டரில் உள்ள ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். ட்விட்டரில் இருக்கும் மற்ற பயனாளர்கள் வெறும் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்.
புதிதாக ட்விட்டருக்கு வரும் unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்ற புதிய நிபந்தனையை எலான் மஸ்க் விதித்திருக்கிறார்.
ஆனால் இது ஒரு தற்காலிக முடிவு என எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில் கடந்த சில மணி நேரமாக டுவிட்டர் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எலான் மஸ்க் எடுத்துள்ள இந்த முடிவுக்கு டுவிட்டர் பயனர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.