குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

#India #Tourist #Tamil People #Rain #HeavyRain #ImportantNews #waterfowl
Mani
1 year ago
குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்டத்தின் குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கனமழையுடன் கூடிய குளிர் காலநிலை நிலவுகிறது. இந்த மகிழ்ச்சியான காலநிலை, குற்றாலம் நீர்வீழ்ச்சியின் அருவிகளில் குளிக்கும் அனுபவத்தை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வருவார்கள்.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தாமதமாக துவங்கியதால் அருவிகளில் விழும் தண்ணீரின் அளவும் குறைந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததுடன், நேற்று காலையிலும் மழை பெய்தது. குளிர் காற்று வேகமாக வீசியது.

தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குவிந்து உற்சாகமாக குளித்தனர். இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் குற்றாலத்தில் சீசன் நிரம்பி வழிகிறது.

ஆனால், மதியம் 1 மணியளவில் அருவிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடித்தவாறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இதனால் அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வத்துடன் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து வெளியேறினர். அருவியில் நீர் மட்டம் குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.