நெல்லை-தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

#India #Tamil Nadu #Tamil People #Fisherman #Tamilnews #Breakingnews #Boat
Mani
1 year ago
நெல்லை-தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை மையமாக கொண்டு 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்தமிழகம் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் நேற்று 3ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ், படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக, மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை சார்பில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் கடற்கரையில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை ஏற்று, நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.