வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் நிலவுவதால் 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

#India #world_news #Fisherman #Tamilnews #ImportantNews
Mani
1 year ago
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் நிலவுவதால் 5 ஆயிரம் மீனவர்கள்  2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே வேதாரண்யம், ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும், கடலில் காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் இன்று 2-து நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை ஓரமாக பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் பலத்த காற்று வீசியதால் உடனடியாக கரைக்கு திரும்பினர்.

மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் கடற்கரையோரம் 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.