டுவிட்டரை வீழ்த்த மெட்டா நிறுவனத்தின் திரட்ஸ் (Threads) அறிமுகம்

#Twitter #Lanka4 #technology #தொழில்நுட்பம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
டுவிட்டரை வீழ்த்த மெட்டா நிறுவனத்தின் திரட்ஸ் (Threads) அறிமுகம்

உலகப்புகழ் பெற்ற சமூக செயலியான டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் தற்போது புதிய சமூக செயலியை அறிமுகம் செய்கிறது. தற்போது முன்னணியில் இருப்பது டுவிட்டர் ஆகும்.

 சமீபத்தில் இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாக டுவிட்டர் தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிகாரப்பூர்வ ப்ளூ டிக்கை பெற கட்டணம், ட்விட்டர் பணியாளர்கள் பணி நீக்கம், தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றால் பயனாளர்கள் பலர் டுவிட்டர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

 இந்நிலையில்தான் டுவிட்டர் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக அதேபோன்ற வசதிகளுடன், கூடுதலாக சில சிறப்பம்சங்களுடன் கூடிய Threads என்ற புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 இதில் அதிகாரப்பூர்வ ப்ளூடிக் போன்றவற்றிற்கு பணம் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த Threads செயலியை ஜூலை 6ம் தேதி அமெரிக்காவில் மெட்டா நிறுவனம் வெளியிடுகிறது.

இதன் மூலம் டுவிட்டரில் எலாம் மஸ்க்கின் புதிய நிபந்தனைகளும் ஏனைய முயற்சிகளும் முடிவுக்கு வரலாம்.