பிரான்ஸ் வன்முறையில் 243 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு தீ வைப்பு

#School #France #Protest #education #fire
Prasu
2 years ago
பிரான்ஸ் வன்முறையில் 243 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு தீ வைப்பு

பிரான்ஸில் 243 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒரு வாரமாக இடம்பெற்ற வன்முறையினால் இதுவரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாஹெல் என்ற இளைஞன் பொலிஸாரால் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பலத்த வன்முறை பதிவாகி வருகிறது. இதில் பேருந்துகள், ட்ராம் ரயில்கள் எரிக்கப்படுவதுடன், நகரசபைக் கட்டிடம் மற்றும் கல்வி நிலையங்கள், பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகளும் எரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏழு நாட்களில் இதுவரை 243 நிலையங்கள் அவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 60 பாடசாலைகள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் Pap Ndiaye தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4