ஒன்பது வியாழக்கிழமைகள் சாய்பாபா விரதமிருப்பின் நினைத்தது நடக்கும்
தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற சாய்பாபாவை வேண்டி கொண்டு வரும் ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருக்கலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம்.
விரதத்தை ஆரம்பிக்க முன்னர் சாயி நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். விரததத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு சாதித்துக் கொள்ள வேண்டும். காலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு அல்லது விக்ரகத்தின் பூஜை செய்ய வேண்டும்.
இந்த விரதத்தின் போது திரவ ஆகாரங்கள் உட்கொள்ளலாம். அதாவது பால், நீர், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை உண்ணலாம். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேலையை மதியமோ அல்லது இரவு உணவு அருந்திக் கொள்ளலாம்.
நாள் முழுவதும் பட்டினியாக இருந்து மட்டும் இந்த விரதத்தை செய்யவே கூடாது. ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் அது மஞ்சள் நிற துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து, தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.
மஞ்சள் நிற மலர்கள் கிடைத்தால் அதை மாலையாக போட்டு சாய் பாபா படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து தீபம், ஊதுபத்தி ஏற்றி பிரசாதமான பழங்கள் இனிப்புகள் கற்கண்டு எதுவானாலும் சரி நைவேத்தியம் செய்து படைத்து சாய்பாபாவை வணங்க வேண்டும்.
முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லலாம். வீட்டிலேயே சாயிபாபாவுக்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்தபின் இவ்விரதம் நிறைவு பெறுகிறது.
பூஜையின்போது சாய் விரத கதைகளைக் கேட்கலாம் சாய் கதைகள், சாய் பாமாலை அல்லது சாய் பவானி ஆகியவற்றை பக்தியுடன் படிக்கலாம், கேட்கலாம்.
வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம். விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அதில் எந்த தவறும் இல்லை.
அந்த வியாழக்கிழமையை கணக்கில் கொள்ளாமல் மற்றொரு வியாழக்கிழமை தொடர்ந்து விரதம் இருந்தால் ஒன்பது வியாழக்கிழமைகள் நிறைவு செய்ய முடியும்.
ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நேராக உணவளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமாகவோ உணவுப் பொருளாக கொடுத்து உதவி செய்வதை சாய்பாபா முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்.
சாய் பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை அவர்களுக்கு எல்லா நலமும் பலமும் கிடைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. விதிமுறைகளின்படி விரதமும் விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.