சென்னை அண்ணா சாலையில் 621 கோடி ரூபாய் செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை அண்ணாசாலை வழியாக நாள்தோறும் அதிக வாகனங்கள் செல்வதால், இச்சாலையில் பல சந்திப்புகள் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், கிண்டி, தாம்பரம் போன்ற முக்கிய சாலைகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி நிதி தேவைப்படும் என தமிழக அரசு கடந்த பட்ஜெட்டில் போது அறிவித்திருந்தது.
இந்நிலையில், எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே இறங்கும் வகையில் அமையவுள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டையை இணைக்கும் உயர்மட்ட பாலம் கட்ட அனுமதி அளித்து தமிழக அரசு நிர்வாக ஆணையை வெளியிட்டுள்ளது. மேலும், அண்ணாசாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.