புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உண்டாகும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உண்டாகும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சியில் லாபமடைவீர்கள். பரணி : உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கார்த்திகை 1 : இன்று புதியவர்களை நம்பி நீங்கள் எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : பெரியவர்களின் ஆலோசனை உங்கள் சங்கடத்தை போக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ரோகிணி : எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை படிப்படியாக சரி செய்வீர்கள். மிருகசீரிடம் 1,2 : தொழிலில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். பிள்கைகளுக்கு பொன் பொருளை சேர்ப்பீர்கள்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4 : நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த செயல் முடிவிற்கு வரும். திருவாதிரை : தடைகளைத் தாண்டி நினைத்ததில் வெற்றி காண்பீர்கள். உங்கள் முயற்சி லாபமாகும். புனர்பூசம்1,2,3 : தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சியில் இழுபறி நிலை உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4 : இன்று சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். புதிய முயற்சியை தவிர்ப்பது நல்லது. பூசம் : நினைத்த செயல்களை நிறைவேற்றி முடிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். ஆயில்யம் : உங்கள் பணிகளில் லாப நிலை உண்டாகும். முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்

மகம் : உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பூரம் : வழக்கு உங்களுக்கு சாதகமாகும். நெருக்கடி நீங்கும். உங்கள் கனவு நனவாகும். நிதிநிலை மேம்படும். உத்திரம் 1 : புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உண்டாகும். நண்பர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். அஸ்தம் : குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். வருமானம் அதிகரிக்கும். நன்மைகள் நடந்தேறும். சித்திரை 1,2 : தடைகளை அகற்றி தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

துலாம்

சித்திரை 3,4 : குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் தொழிலில் கிடைக்கும். சுவாதி : பயணங்களால் நன்மை உண்டு. வேலைக்காக நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் நாள். விசாகம் 1,2,3 : சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : சகோதரர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அனுஷம் : மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த தடை விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். கேட்டை : வருவாயைக் கொண்டு கடன்களை அடைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம் : கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். நிதிநிலை உயரும். பூராடம் : நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உத்திராடம் 1 : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : தொழிலில் இருந்த போட்டி விலகும். வருமானம் உயரும். நினைத்ததை அடைவீர்கள். திருவோணம் : திட்டமிட்டு செயல்பட்டு ஒரு முயற்சியில் லாபம் காண்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். அவிட்டம் 1,2 : வேலையை எதிர்நோக்கியவருக்கு நல்ல தகவல் வரும். உங்கள் செயல்களில் பொறுமை அவசியம்.

கும்பம்

அவிட்டம் 3,4 : செலவுகள் அதிகரிக்கும். முயற்சியில் சில தடைகளை சந்திப்பீர்கள். மாலையில் நிலைமை சீராகும். சதயம் : வியாபாரத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பூரட்டாதி 1,2,3: உதவி புரிய வந்தவர் விலகிச் செல்வார். வாழ்க்கைத் துணையால் ஒரு பிரச்சினை முடிவிற்கு வரும்.

மீனம்

பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். உத்திரட்டாதி : பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் தீரும். எதிர்பாராத வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி : உங்கள் முயற்சி எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.