ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் திருட்டு

#India #Vegetable #Tamilnews
Mani
1 year ago
ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் திருட்டு

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்குட்பட்ட கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பெண் விவசாயியின் விவசாய வயலில் இருந்து 50-60 தக்காளி மூட்டைகளை திருடர்கள் செவ்வாய்கிழமை இரவு வெட்டிச் சென்றுள்ளனர். அதன் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாயாகும். பெண் விவசாயி தாரிணி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு, நன்கு விளைச்சல் கண்டிருந்த நிலையில், அடுத்த வாரம் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த சூழலில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து தாரிணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ​​“பருப்பு அறுவடையில் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம், ஆகவே கடனை வாங்கி தக்காளி பயிரிட்டோம். அறுவடை சிறப்பாக நடைபெற்றது. தற்செயலாக தக்காளி விலையும் அதிகரித்தது. லாபம் ஈட்டிவிடலாம் என நினைத்துக்கொண்டிருக்கும் சூழலில், இரவோடு இரவாக 50-60 தக்காளி மூட்டைகளை திருடர்கள் எடுத்து சென்றுவிட்டனர். அதுமட்டுமில்லாது, எஞ்சியிருந்த பயிர்களையும் அவர்கள் அழித்துவிட்டு சென்றுவிட்டனர்” என வேதனையுடன் கூறினார்.