ஒடிசா ரயில் விபத்திற்கு மனித தவறுகளே காரணம்!
இந்தியாவில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திய ரயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதில் குறைந்தது 288 பேர் உயிரிழந்ததுடன், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
ரயில் பாதைகளுக்கான தானியங்கி சிக்னல் அமைப்பின் வயரிங்கில் ஏற்பட்ட பிழைதான் இந்த விபத்திற்கு காரணம் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
2015 ஆம் ஆண்டு தொடக்கத்தில் செய்யப்பட்ட சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறை பணியாளர்களின் அலட்சியம், காரணமாக குறித்த அமைப்பு சரிசெய்யப்படாத நிலையில், இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தண்டவாள பராமரிப்பு பணியின்போது குழப்பம் ஏற்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸுக்கு தவறான சிக்னல்கள் அனுப்பப்பட்டதாகவும், இதனால் குறித்த ரயில் ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட பிழையை திருத்தாமல், தொழில்நுட்ப வல்லுநர்கள் கணினியை மாற்றியமைத்தது குறித்த விபத்து நேர்வதற்கு பிரதான காரணமாக அமைந்ததாக கூறப்பட்டுள்ளது.