சந்திரயான் 3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு

#India #Tamilnews #Scientists #Breakingnews #Scientist #Rocket
Mani
1 year ago
சந்திரயான் 3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரு சந்திர ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் திட்டத்தை தொடங்கியது. அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 22, 2019 அன்று புறப்பட்டது.

இருப்பினும், தொழில்நுட்பக் காரணமாக விண்கலம் அதன் திட்டமிட்ட சந்திர தரையிறக்கத்திலிருந்து விலகி, இறுதியில் சந்திரனில் மோதியது. அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படுவது அதன் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், குறிப்பிட்ட ஏவுதல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வரும் 14ம் தேதி மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!