இந்துக்கள் ஸ்வரண மாதத்தில் பச்சை நிறத்தை பயன்படுத்துவதன் காரணம்
இந்துசமயத்தவர்களின் மாதங்களில் புனிதமானது ஸ்வரண மாதம். இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக இது காணப்படுகிறது. காரணம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 4 ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 31 ம் தேதி நிறைவடைகின்றமையாகும்.
கிட்டதட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஸ்ரவண மாதம், இரண்டு மாதங்கள் நீடிக்கிறது. ஸ்ரவண மாதம் என்பது சிவ பெருமானை வழிபடுவதற்கு உரிய மாதமாகும்.
சிவனை வழிபட்டு, அவரின் பரிபூரண ஆசிகளை பெற உதவும் மாதமாகும். இந்த மாதம் முழுவதும் விரதம் இருப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது சிவனின் அருளை பெற்றுத் தரும்.
சாதாரணமாகவே திங்கட்கிழமைகள் முக்கியமானவை என்றாலும், ஸ்ரவண மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் இன்னும் விசேஷமானவையாகும். திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பதுடன் அசைவ உணவுகளை தவிர்ப்பது, பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வது, பச்சை நிறத்தினால் ஆன ஆடை மற்றும் அணிகளைகளை அணிந்து கொள்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
வட இந்தியாவில் இந்த மாதத்தில் பச்சை நிறம் மிகவும் புண்ணியமான நிறமாக கருதப்படுகிறது. பெண்கள் பச்சை நிற புடவை, பச்சை நிறத்தில் வளையல்கள், துப்பட்டா உள்ளிட்டவற்றை அணிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அது என்ன பச்சை நிறம், பச்சை நிறத்திற்கும் ஸ்ரவண மாதத்திற்கும் அப்படி என்ன தொடர்பு என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். திருமண வாழ்க்கையை அதிர்ஷ்டத்தை தரும் நிறமாக பச்சை நிறம் கருதப்படுகிறது.
இதனால் திருமணமான பெண்கள் ஸ்ரவண மாதத்தில் பச்சை நிற அணிகலன்களை அணிந்து கொள்வதால் அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
சிவன் - பார்வதியை போல் தம்பதிகள் இணை பிரியாது ஒற்றுமையுடன் அன்பாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. பச்சை நிறம் இயற்கையின் வளத்தை குறிக்கும் நிறமாகும்.
பல தெய்வங்களுக்கும் பச்சை நிறம் உகந்தது என்பதால் இந்த மாதத்தில் பச்சை நிற பொருட்களை உடுத்திக் கொள்வது சுபமான பலன்களை தரும். இது வாழ்க்கையை வளமையானதாக மாற்றும் என்பது நம்பிக்கை.
தனிப்பட்டவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் தரும் நிறமாக பச்சை நிறம் கருதப்படுகிறது. வேலையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பச்சை நிறத்தை பயன்படுத்துவது வளத்தை தரும் என்பது நம்பிக்கை.
பச்சை நிற அதிர்ஷ்ட கற்களை பயன்படுத்துவதும் தொழில் அல்லது வேலையில் முன்னேற்றத்தை தரக் கூடியதாகும். பச்சை நிறத்தை அணிந்து கொள்வது பல விதமான நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
மழைக்காலத்தில் ஸ்வரண மாதம் வருவதால் இக்காலம் நோய் நொடியகளிலிருந்து ஆரோக்கியத்தினை மேம்படுத்த வேண்டிய காலமாகும். இதனால் பச்சை நிறம் அதற்கு ஏற்றாட்போல் அமைவது வாஸ்துவமே.