குழப்பம் அதிகரித்து வருமானம் இழுபறியாகும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
குழப்பம் அதிகரித்து வருமானம் இழுபறியாகும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபமடைவீர்கள். வெளியூர் பயணத்தில் நன்மை காண்பீர்கள். பரணி : எதிர்பார்த்த பணம் வரும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கார்த்திகை 1 : கவனமாக செயல்பட்டு உங்கள் தொழிலில் லாபம் காண்பீர்கள்.நிதி நிலை அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். நண்பர்களின் உதவி நன்மை தரும். ரோகிணி : உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். மிருகசீரிடம் 1,2 : வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்கள் செயல் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். திருவாதிரை : விஐபிகள் ஆதரவுடன் நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். புனர்பூசம் 1,2,3 : தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4 : நேற்றிருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பூசம் : நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும். வருமானம் இழுபறியாகும். ஆயில்யம் : உங்கள் செயலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மற்றவரிடம் வீண் விவாதம் வேண்டாம்.

சிம்மம்

மகம் : உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரம் : நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்திரம் 1 : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு லாபம் காண்பீர். வாழ்க்கைத் துணையின் வழி ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : எதிரிகள் விலகிச் செல்வர். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை நடக்கும். அஸ்தம் : உறவினர்களால் உண்டான பிரச்னை தீரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். சித்திரை 1,2: வியாபார வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர். மறைமுகத் தொல்லை விலகும். துணிச்சல் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: வாரிசுகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர். எதிர்பார்த்த வருமானத்தால் சேமிப்பு கூடும். சுவாதி: வழக்கமான செயல்களில் நன்மை உண்டு. விலகிச்சென்ற உறவினர்கள் மீண்டும் வருவார்கள். விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அனுஷம் : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர். கேட்டை : சொத்து வகையில் உண்டான பிரச்னையில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். நிதிநிலை உயரும்.

தனுசு:

மூலம் : சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வரும். பூராடம் : உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்திராடம் 1 : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். நண்பர்களால் நன்மை அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : எதிர்பார்த்த வருமானம் இன்று வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். திருவோணம் : முயற்சியில் இருந்த தடை விலகும். புதிய சொத்து வாங்குவதில் முன்னேற்றம் காண்பீர்கள். அவிட்டம் 1,2 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். இன்றைய வேலையை நாளைக்கு ஒத்தி வைப்பீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4 : திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவார்கள். சதயம் : குடும்பத்தில் வாக்கு வாதம் உண்டாகும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். பூரட்டாதி 1,2,3 : எதிர்பார்த்த வரவுகள் உண்டாகும் என்றாலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

பூரட்டாதி 4 : எதிர்பாராத செலவு ஏற்படும். அடுத்தவரை நம்பி ஈடுபடும் செயலில் சங்கடம் அடைவீர். உத்திரட்டாதி : வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மை தரும். ரேவதி : வியாபாரத்தில் நெருக்கடியான நிலை ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சங்கடம் தோன்றும்.