இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகளை இராணுவம் கட்டி வைத்து அடிக்கப்பட்ட இடமா? இந்த கொக்குத்தொடுவாய்!

#SriLanka #Mullaitivu
Mayoorikka
1 year ago
இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகளை இராணுவம் கட்டி வைத்து அடிக்கப்பட்ட இடமா? இந்த கொக்குத்தொடுவாய்!

தமிழர் தாயகப் பகுதிகளில் யுத்தத்தின் போது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளின் அடையாளங்கள் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 இந்த நிலையில் தான் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி விவகாரமும் சிங்கள அரசின் கொடூர முகத்தின் சாட்சியாக அமைகின்றதாக சந்தேகம் எழுகின்றது.

 அண்மையில் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் நீர்வழங்கலுக்கான குழாய்கள் பதிக்கப்படுவதற்காக தோண்டப்பட்ட போது உடல் எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன அதில் பெண்களின் ஆடைகளும் இருந்ததாகவும் அவை விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் புலிகளது ஆடைகளாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் தான் கடந்தவாரம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா நேற்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணர்கள் மற்று வெடி குண்டை செயலிழக்கச் செய்யும் விசேட அதிகாரிகள் உட்பட பல தரப்பினர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளவதற்கு உத்தரவிட்டிருந்தார். 

அந்த உத்தரவுக்கமைய நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளபப்ட்டன. அந்த அகழ்வின் போது நேற்றைய தினம் மாத்திரம் 13 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் நேற்றைய தின அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் இன்னும் பல எலும்புக்கூடுகள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. முன்னர் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளது ஆடைகள் மற்றும் உடலங்கள் அகழ்வின் போது வெளிப்பட்டமை பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 இவர்கள் அரச படைத்தரப்பினரால் சித்திரவதைக்கு உட்படுத்தி கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தற்பொழுது சந்தகம் எழுந்துள்ளது.

 இவர்களது உடல்கள் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கையளிக்கப்பட்ட நிலையில் அவர்களை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணங்களிலும் மக்கள் மத்தியில் சந்தேகம் எழத் தான் செய்கின்றது.

 கடந்த காலங்களில் அரச படைத் தரப்பினரின் கொடூரங்கள் புகைப்பட சாட்சியங்களாக வெளிவந்தன. அதாவது பெண் போராளிகளினை நிர்வாணமான நிலையில் கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களினை புகைப்பட சட்சியங்களாவும் நேரில் பார்த்த சாட்சியங்களாவும் அறிந்துள்ளோம். 

images/content-image/2023/07/1688718183.jpg

அவ்வாறுதான் இந்த கொக்குத் தொடுவாய் படுகொலையும் அமைந்துள்ளதா என்றும் எண்ணத்தோன்றுகின்றது. 

 இது இவ்வாறு இருக்க சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பல்வேறு அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான எலும்புக்கு கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான பதில்களினை சொல்லப் போகின்றது அல்லது. 

கடந்த காலங்களில் இருந்த ராஜபக்ச ஆரசாங்கங்கள் போல எலும்புக்கு கூடுகள் மீட்கப்பட்ட சாட்சியங்களை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அழித்தது போல இந்த அரசாங்கமும் இந்த தடயங்களினை அழிப்பதற்கும் நீர்த்துப் போகச் செய்வதற்கும் முனைப்புகள் எடுக்குமா என்ற சந்தேகமும் எழுகின்றது.

 இந்தநிலையில் நேற்றைய தினம் அகழ்வின் போது சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்களினையும் இங்கே குறிப்பிட வேண்டும் அதாவது, அகழ்வுப் பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார். 

சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் எனவும் ஆனால் இந்த அகழ்வுப் பணிகள் அவ்வாறு இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

 இந்த நிலையில் தான் தற்போதைய ரணில் அரசாங்கம் இவ்வாறான மனிதப் புதைகுழி விவகாரங்களினை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

images/content-image/2023/07/1688718153.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!