கவனத்துடன் இருக்கவேண்டிய இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
கவனத்துடன் இருக்கவேண்டிய இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். பரணி : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்பு உயரும். கார்த்திகை 1 : எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். இழுபறியாய் இருந்த ஒரு வேலை எளிதாக முடியும். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். ரோகிணி : பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். தடைபட்டிருந்த செயல்களில் வெற்றி உண்டாகும். மிருகசீரிடம் 1,2 : நீங்கள் மேற்கொண்ட பழைய முயற்சி இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உறவினர்களின் ஆதரவு உண்டாகும். கவனமுடன் செயல்பட்டு ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். திருவாதிரை : நீங்கள் ஈடுபடும் முயற்சியில் லாபம் உண்டாகும் என்றாலும் செயல்களில் அவசரம் வேண்டாம். புனர்பூசம் 1,2,3 : வேலை பளு அதிகரிக்கும் என்பதால் பணிபுரியும் இடத்தில் நிதானம் தேவை. 

கடகம்

புனர்பூசம் 4 : உங்களை அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். இருந்தாலும் மரியாதை கூடும். பூசம் : உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவை இல்லாமல் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். ஆயில்யம் : மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும். 

சிம்மம்

மகம் : நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். பூரம் : பிரச்னைகளை சமாளித்து வெளியில் வருவீர்கள். உறவினர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி காண்பீர். தடைபட்டிருந்த செயல்கள் இன்று நடந்தேறும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். அஸ்தம் : சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர். வியாபாரத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். சித்திரை 1,2 : உங்களுக்கு பெரியோரின் ஆதரவும் ஆசியும் உண்டு. ஒரு செயலில் அதிரடியாக செயல்படுவீர்கள். 

துலாம்

சித்திரை 3,4 : நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். பிள்ளைகள் குறித்த சிந்தனை மேலோங்கும். சுவாதி : உங்கள் முயற்சி ஒன்று இழுபறியாகும். குடும்பத்தினர் அதிருப்திக்கு ஆளாவீர்கள். விசாகம் 1,2,3 : நீண்ட இழுபறிக்குப்பின் ஒரு வேலை முடியும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். 

விருச்சிகம்

விசாகம் 4 : அதிகாரியிடம் அனுசரணை வேண்டும். பணியில் இருப்பவர்கள் விழிப்புணர்வு தேவையான நாள். அனுஷம் : உங்கள் செயல் காரணமாக மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உண்டாகும். கேட்டை : வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் காணமுடியாமல் போகும் நாள். 

தனுசு

மூலம் : தடைபட்டிருந்த வருவாய் இன்று உங்கள் கைக்கு வரும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பூராடம் : முயற்சியின் வழியே விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் 1 : மற்றவர் நலனில் அக்கறை காட்டுவீர். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : புதிய எண்ணம் மேலோங்கும் என்றாலும் அதைத் தவிர்ப்பது நல்லது. திருவோணம் : மற்றவர் தரும் நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை. அவிட்டம் 1,2 : வரவேண்டிய பணம் வந்து சேரும். செலவுகள் வழியே லாபம் அதிகரிக்கும். யோசித்து செயல்படுவீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : மனதில் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதிலும் சங்கடம் தோன்றும். சதயம் : எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலைதுாக்கும். பூரட்டாதி 1,2,3 : உங்கள் முயற்சியில் ஒன்று வெற்றியாகும். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4 : வெளியூர் பயணத்தில் லாபத்தை அடைவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்திரட்டாதி : நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ரேவதி : தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும். பொருளாதார நெருக்கடி நீங்கும். நிதிநிலை உயரும்.