தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி!
#India
#Tamil Nadu
#Tamil People
#Tamilnews
#Breakingnews
Mani
1 year ago
கடந்த சில நாட்களாக தக்காளி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் நியாயமான விலையில் தக்காளி விற்பனைக்கு தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. நேற்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை 40 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்பட்டவை, தற்போது 80 அல்லது 90 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கண்சமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், தக்காளியின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.90க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ரூ.30 உயர்ந்து, தற்போது தக்காளி கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது.
நேற்று தக்காளி விலை குறைந்ததால் சற்று மகிழ்ச்சியில் இருந்த மக்கள் தற்போது ஒரே நாளில் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.