வியாபாரத்தில் லாபம் கொள்ளும் மூன்று ராசியினர் , அதிலும் ரிஷப ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வியாபாரத்தில் லாபம் கொள்ளும் மூன்று ராசியினர் , அதிலும் ரிஷப ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பரணி : திட்டமிட்டிருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். கார்த்திகை 1 : புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. வரவை விட செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்துடன் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். ரோகிணி : பொருளாதார நிலை சீராகும். வீட்டை புதுப்பிக்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். மிருகசீரிடம் 1,2 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். வரவு அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். திருவாதிரை : நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். செல்வாக்கு உயரும். புனர்பூசம் 1,2,3 : உங்களுக்கு பொது நலனில் கவனம் செல்லுத்துவீர்கள். தொழிலில் முயற்சிக்கேற்ற வருமானம் உண்டு.

கடகம்

புனர்பூசம் 4 : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பூசம் : உங்கள் திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு ஒரு முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். ஆயில்யம் : தொழிலை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும். கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.

சிம்மம்

மகம் : சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலைப்படும். பூரம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் கவனம் தேவை. குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக இன்று செலவிடுவீர்கள். உத்திரம் 1 : வெளியூர் பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். ஒரு சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4 : குடும்பத்தினர் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். அஸ்தம் : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சித்திரை 1,2: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4 : எதிர்ப்புகள் விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகி சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் நீண்ட நாள் முயற்சி ஒன்றில் வெற்றியைக் காண்பீர்கள். விசாகம் 1,2,3 : தைரியத்துடன் செயல்படுவீர்கள். குடும்பச் சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். அவர்கள் நிலையில் உயர்வு தோன்றும். அனுஷம் : இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் ஒரு முடிவிற்கு வரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். கேட்டை : பெற்றோர் ஆதரவுடன் உங்கள் விருப்பம் நிறைவேறும். எண்ணியதை விரைவாக அடைவீர்கள்.

தனுசு

மூலம் : மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். பூராடம் : குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள். உத்திராடம் 1 : உங்கள் செயலில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : தைரியத்துடன் செயல்படுவீர். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். திருவோணம் : திட்டமிட்டு செயல்பட்டு லாபமடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : உங்கள் எண்ணத்தை இன்று நண்பர்கள் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4 : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர். பண நெருக்கடிகளை சரி செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். சதயம் : துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.

மீனம்

பூரட்டாதி 4 : மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். உத்திரட்டாதி : குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். வேலை பளுவால் சங்கடம் ஏற்படும். ரேவதி : கோயில் வழிபாட்டால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சியில் குழப்பம் உண்டாகும்.