திருச்சூரில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

#India #Earthquake #Tamilnews #Breakingnews #Kerala #Mountain
Mani
1 year ago
திருச்சூரில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நேற்று முன்தினம் திருச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் 2-வது முறையாக ஏற்பட்ட நில அதிர்வில் பொன்னுக்கரை நேதாஜி வீதியில் உள்ள இரு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. திருக்கூர், அழகப்பநகர், வரந்தரப்பள்ளி, புதுக்காடு, நென்மணிக்கரை ஆகிய ஊராட்சிகளில் பல இடங்களில் நிலஅதிர்வும், வெடிப்புகள் ஏற்பட்டன.

நேற்று மதியம், திருச்சூர் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் நிலநடுக்கம் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டன. கடந்த 2 முறை நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில், நேற்று அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் சில வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.