வேலை பளு அதிகரிக்கும் , எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வேலை பளு அதிகரிக்கும் , எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நேற்றைய பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த வரவு திருப்தி அளிக்கும். பரணி : நீங்கள் திட்டமிட்ட வேலையில் முன்னேற்றம் காண்பீர். மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெறும். கார்த்திகை 1: பழைய பிரச்னை ஒன்றை சரி செய்வீர். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். தவறான நபர்களின் நட்பினால் சில பிரச்னைகளை சந்திப்பீர். ரோகிணி : வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மிருகசீரிடம் 1,2 : வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். புதிய நண்பர் உதவியால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவாதிரை : தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும். தடைபட்டிருந்த செயல் நடைபெறும். புனர்பூசம் 1,2,3 : குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.

கடகம்

புனர்பூசம் 4 : தொழிலை விரிவு செய்வது குறித்து நண்பரிடம் பேசுவீர். எதிர்பார்த்த வேலைக்கான நல்ல தகவல் வரும். பூசம் : உங்கள் முயற்சிகளில் ஒன்று வெற்றியாகும். இழுபறியாக இருந்தவற்றில் மாற்றம் உண்டாகும். ஆயில்யம் : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வீடு தேடி வரும். 

சிம்மம்

மகம் : திட்டமிட்ட செயல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள் பூரம் : பழைய பிரச்னை முடிவிற்கு வரும். பெரியோர் ஆலோசனையால் ஆதாயம் காண்பீர்கள். உத்திரம் 1: திட்டமிட்டு செயல்படுவீர். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். 

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். மனதில் பதட்டம் அதிகரிக்கும். உறவுகள் வழியில் சங்கடம் தோன்றும். அஸ்தம் : அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். சித்திரை 1,2 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் காண உழைக்க வேண்டி நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். 

துலாம்

சித்திரை 3,4 : நண்பர்கள் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். நினைத்ததை நினைத்தபடி முடித்து லாபம் காண்பீர். சுவாதி : அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அதிகாரிகளால் பாரட்டப்படுவீர்கள். மதிப்பு கூடும். விசாகம் 1,2,3: குறுக்கு வழியில் ஆதாயம் அடைய சிலர் வழிகாட்டலாம். அதனால் சிக்கல்கள் தோன்ற வாய்ப்புண்டு.

விருச்சிகம்:

விசாகம் 4 : உங்களிடம் புதிய உற்சாகம் தோன்றும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். அனுஷம் : மறைமுக எதிர்ப்புகளை சரி செய்வீர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். கேட்டை : வியாபாரத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்ப்பு விலகும். தடைபட்டிருந்த பணம் வரும். 

தனுசு

மூலம் : உங்கள் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். பூராடம் : உங்கள் உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தெய்வ வழிபாடு அவசியம் உத்திராடம் 1 : உங்கள் செயல் லாபமடையும் அதனால் வெளியில் மதிப்பு அதிகரிக்கும். நன்மையான நாள். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : வேலையில் இருப்போருக்கு கவனம் தேவை.நேர்மையான செயல்களால் நன்மை அதிகரிக்கும் திருவோணம் : திட்டமிட்டிருந்த செயல் நிறைவேறாமல் போகும். உங்கள் முயற்சி ஒன்றில் குழப்ப நிலை உண்டாகும். அவிட்டம் 1,2 : புதிய முயற்சி இழுபறியாகும் என்பதால் தள்ளி வைப்பது நன்மையாகும். திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பர். சதயம் : நேற்றுவரை இருந்த பிரச்னை நீங்கும். விரும்பியதை அடைவீர். உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3 : குடும்பத்திற்காக ஒரு முயற்சியில் இறங்குவீர்கள். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் நாள். 

மீனம்

பூரட்டாதி 4 : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரவேண்டிய பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திரட்டாதி : பண வரவில் இருந்த தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. ரேவதி : அலுவலகத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்