திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

#India #Delhi #Minister #2023 #Tamilnews
Mani
1 year ago
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி

தலைநகர் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 50வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஆன்லைன் கேமிங், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும். புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்படும்.

செயற்கை ஜரிகைக்கு 12% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்ட நிலையில் இப்போது அது 5% ஜி.எஸ்.டியாக குறைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட பருத்திக்கு முந்தைய ஜி.எஸ்.டி வரி பாக்கி ரத்து செய்யப்படும்.

திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி வரி 18% ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!