வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது
வட இந்தியாவின் பல நகரங்களில் பரவலாக மழையின் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதனால் காரணமாக பல்வேறு பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, கனமழை காரணமாக வட இந்தியாவின் பல மாநிலங்களில் ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக, தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் கனமழை வெள்ளத்தால் மழைப்பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.