கவியருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

#Tamilnews #Breakingnews #ImportantNews #waterfowl #Coimbatore
Mani
1 year ago
கவியருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அமைந்துள்ள கவியருவி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெரிய அளவில் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கவியருவி வறண்டு காட்சி அளித்தது. ஜனவரி 28 முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி, வால்பாறை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு வேலியை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் வால்பாறை, பொள்ளாச்சி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்துள்ளது. இதனால் கவியருவியில் தண்ணீர் வரத்து ஓரளவு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.எனவே பொள்ளாச்சி கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான வனத்துறையின் தடை இன்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இன்று காலை வாகனங்களில் கவியருவிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் இதமாக விழும் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து, மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!