பெரியோர் ஆதரவுடன் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
பெரியோர் ஆதரவுடன் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். பரணி : எதிர்பார்த்த தகவலுடன் வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கார்த்திகை 1: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் மனதிற்குப் பிடித்தவற்றை செய்வீர்கள். புதிய முயற்சியை தள்ளிப் போடுவது நல்லது. ரோகிணி : உடலும் மனமும் மகிழும் வகையில் இன்றைய பொழுது அமையும். நினைத்ததை நிறைவேற்றுவீர். மிருகசீரிடம் 1,2 : தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் வழியே நன்மை அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : அலைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை : புதிய சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சி ஒன்றில் நீங்கள் எதிர்பார்த்த பலன் உண்டாகும். புனர்பூசம் 1,2,3 : உடல் நிலையில் இருந்த பிரச்னை விலகும். வீண் செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4 : முயற்சியில் வேகம் உண்டாகும். எதிர்பார்த்த நண்பர்களால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பூசம் : தொழிலில் புதிய யுக்தியைக் கையாள்வீர். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆயில்யம் : விஐபிகள் சந்திப்பு ஆதாயத்தை உண்டாக்கும். தடைபட்டிருந்த வருவாய் வரும். கடன்களை அடைப்பீர்கள். 

சிம்மம்

மகம் : உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். அரசு வழியில் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பூரம் : உங்கள் நீண்டநாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். செயல்களில் நன்மைகளைக் காண்பீர்கள். உத்திரம் 1: குழப்பத்தில் இருந்து விடுபடுவீர். குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்வீர். 

கன்னி

உத்திரம் 2,3,4 : நேற்று வரை இருந்த சங்கடம் இன்று விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அஸ்தம் : நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். சித்திரை 1,2 : பெரியோர் ஆதரவுடன் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். 

துலாம்

சித்திரை 3,4 : உங்கள் செயலில் நெருக்கடியை சந்திப்பீர். எதிரிகளால் சில பிரச்னை உருவாகும். கவனம் தேவை. சுவாதி : திடீர் பிரச்னையை சந்தித்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். செலவிற்கேற்ற வருமானம் உண்டு. விசாகம் 1,2,3 : மனதில் இருந்த குழப்பம் நீங்கும். திட்டமிட்டு செயல்பட உங்கள் எண்ணம் நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4 : இன்று உங்கள் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்னை விலகும். அனுஷம் : குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடம் விலகும். கேட்டை : நீண்டநாள் திட்டம் ஒன்று நிறைவேறும். நண்பர்கள் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவீர்கள்.

தனுசு

மூலம் : இழுபறியாக இருந்த வேலை முடியும். மறைமுகத் தொல்லைகள் விலகும். நினைத்ததை அடைவீர்கள். பூராடம் : பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர். உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் 1 : உங்கள் திறமை இன்று வெளிப்படும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவார்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : உங்கள் மனம் ஓய்வை விரும்பினாலும் அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். திருவோணம் : வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். அவிட்டம் 1,2 : குடும்பத்தினர் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவீர். உடலும் மனமும் சந்தோஷமடையும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். செயல்களில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். சதயம் : முயற்சி வெற்றி அடையும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் செயலை பிறர் பாராட்டுவர். பூரட்டாதி 1,2,3 : உங்கள் செயலில் இருந்த இழுபறி நிலை மாறும். உறவினர் ஒருவரால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்திரட்டாதி : வியாபாரத்தில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி : துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.