இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மொத்தம் 88 பேர் உயிரிழப்பு

#India #Death #Flood #HeavyRain #Breakingnews #Died #Mountain
Mani
1 year ago
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மொத்தம் 88 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு பருவமழையின் காரணமாக வட இந்தியாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது, தலைநகர் டெல்லி மற்றும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கனமழை பெய்தது.

இதற்கிடையில், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் கடந்த மூன்று நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தை கடுமையாக பாதித்துள்ளன. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.

சிம்லா - மணாலி, சண்டிகர் - மணாலி, சிம்லா - குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக மொத்தம் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!