மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் திடீரென ஒத்திவைப்பு
இளநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, 'பி.ஜி.' என்ற முதுநிலை மருத்துவப் படிப்பைத் தொடர உள்ள மாணவர்கள் நீட்' என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் 'நெக்ஸ்ட்' எனப்படும் புதிய தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளது.
தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நெக்ஸ்ட் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த சூழ்நிலையில் நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.